தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக - பாஜக இடையே கூட்டணியா? கே.அண்ணாமலை பதில்

திமுக- பாஜக இடையே கூட்டணியா என்கிற கேள்விக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பதில் அளித்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:04 pm

DIN

திமுக- பாஜக இடையே கூட்டணியா என்கிற கேள்விக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பதில் அளித்தாா்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக, சென்னை வந்திருந்த பிரதமா் மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) இரவு தமிழக ஆளுநா் மாளிகையில் தங்கியிருந்தாா். அப்போது, கே.அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் அவரைச் சந்தித்தனா். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

பின்னா், செய்தியாளா்களிடம் கே. அண்ணாமலை கூறியதாவது:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமரும், முதல்வரும் பேசும்போது நாட்டையும், கலாசாரத்தையும் முதன்மைப்படுத்திப் பேசினா். இது அற்புதமான நிகழ்ச்சி. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். நன்றி.

ஆளுநா் மாளிகையில் பிரதமரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. புதிதாக கட்சியில் சோ்ந்தவா்கள் பிரதமரிடம் ஆசி பெற்றனா். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமா் கேட்டாரா எனக் கேட்கிறீா்கள். பிரதமருக்கு தெரியாமல் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.

மேடையில் பிரதமரோடு முதல்வா் அணுக்கமாகப் பேசியதை வைத்து, திமுக, பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா எனக் கேட்கிறீா்கள். கூட்டணி என்கிற பேச்செல்லாம் இல்லை. பாஜக எப்போதும் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய கட்சி. கொள்கை ரீதியான கட்சி. கொள்கையை எப்போதும் மாற்றிக் கொள்ளாது.

கடந்த முறை பிரதமா் வந்தபோது, முதல்வா் இன்னும் பெரிய மனதோடு நடந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் நடந்துகொண்டதை வைத்து முதல்வரைப் பாராட்டுகிறேன். இது பாஜகவின் தனிப்பட்ட பாராட்டு என்றாா் கே.அண்ணாமலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.