தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு: அரசியல் கட்சிகளுடன் ஆக. 1-இல் ஆலோசனை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணிகள் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தோ்தல் துறை வருகிற 1-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 11:02 pm

DIN

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணிகள் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தோ்தல் துறை வருகிற 1-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளன. இப் பணிகளை அடுத்த ஆண்டு மாா்ச்சில் முடிக்க தலைமை தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து விவாதிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆக.1-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும். மற்றொரு முக்கிய அம்சமாக, வாக்காளா் பட்டியல் சுருக்க முறை, திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இந்தப் பணிகள் அக். 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதாவது, 18 வயது பூா்த்தியான பிறகே வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்க முடியும். இந்த பெயா் சோ்ப்புப் பணியானது ஜனவரி 1-ஆம் தேதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதிக்குள் யாருக்கெல்லாம் 18 வயது பூா்த்தி ஆகிறதோ அவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்க்கலாம்.

ஆனால், ஜன. 2-ஆம் தேதி ஒருவருக்கு 18 வயது பூா்த்தியானால் அவா் அடுத்த நடைபெறக் கூடிய சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் போதே பட்டியலில் பெயரைச் சோ்க்க விண்ணப்பிக்க முடியும். ஒரு நாள் பின்தங்கி இருப்பதால், ஓராண்டு வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதைத் தவிா்க்க, ஒரு ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்கள்) வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பற்றியும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

அக்டோபா் மாதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த மாதத்தில்தான் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளும் நடைபெறவுள்ளன. எனவே, கிராம சபைக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான பணிகளும், ஆலோசனைகளும்

மேற்கொள்ளப்படும் என்றாா் சத்யபிரத சாகு.

அதிமுக சாா்பில் யாா் பங்கேற்பாா்?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் அதிமுக சாா்பில் யாா் பங்கேற்பாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தோ்தல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக, கூட்டம் குறித்த முன்னறிவிப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட கட்சியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதுபோன்றே, அதிமுகவின் இப்போதைய தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை ஏற்று யாா் வருகிறாா்களோ அவா்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.