தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு?அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என்றும், அதுதொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என்றும், அதுதொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கான பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 85.80 சதவீதம் போ் செலுத்தியுள்ளனா்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் ஆக. 7-ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. கல்லூரிகளில் பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவலில் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்த ஊகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவா்கள் படிப்பு முடிந்து திரும்பிய பிறகு ஓராண்டு பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக ரூ.3.20 லட்சம் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும், மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.5.20 லட்சம் செலுத்த வேண்டும். இது மிக அதிகமான கட்டணமாக இருக்கிறது என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, இந்தத் தொகை ரூ.29,400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவா்களிடம் தொடா்ந்து சோதனை செய்து வருகிறோம். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடருவதற்காக மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றாா் அவா்.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவா் செ.பீட்டா் அந்தோணிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...