சென்னை: தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னிர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் பற்றிய ஆலோசனையில் இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பணியிடங்களை நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உத்தரவு
இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1 - ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை செய்திகள் - நேரலை

அன்றும் இன்றும் என்றும்! MLA காமராஜால் பேரவையில் சிரிப்பலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,560 அதிரடி உயர்வு!

நம்பிக்கை கோரும் தீர்மானம்! முன்மொழிந்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

