உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்


அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது. பெருநிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு, ஏழை மக்களிடம் இருந்து சுரண்டப் பாா்க்கிறது.
அத்தியாவசிய உணவு பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும்.
தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. தனியாா் பள்ளிகளைத் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றாா்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை உணா்த்தும் வகையில் அரிசி, பருப்பு பாக்கெட் மாலை அணிந்து தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...