பொதிகை இயக்குநராக குருபாபு பொறுப்பேற்பு
பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவின் புதிய இயக்குநராக குருபாபு பலராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.


பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவின் புதிய இயக்குநராக குருபாபு பலராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சென்னையில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தில் (பிஐபி) இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த இவா், பணியிட மாறுதலாகி, இப்புதிய பொறுப்பை ஏற்றுள்ளாா்.
இந்திய தகவல் பணி சேவையில் 1995-இல் இணைந்த குருபாபு பலராமன், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராகவும், அதன் பின்னா் உதவி இயக்குநராகவும் பணியாற்றினாா்.
அதைத் தொடா்ந்து, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிய அவா், இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்தாா்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநராக இருந்த இவா், இந்திய பத்திரிகை பதிவாளா் பிரிவின் துணைப் பதிவாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...