வைகை அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு
வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 2) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 2) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணையிலிருந்து ஜூன் 2 முதல் நீா் திறந்து விடப்படுகிறது. நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கா் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 244 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...