சேலம் பட்டை கோவில் அருகே மர்ம கும்பலால் மளிகைக் கடை உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநில வியாபாரியான இவர், இன்று(வியாழக்கிழமை) அதிகாலை வழக்கம்போல கடையைத் திறந்துள்ளார்.
அப்போது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட வட இந்திய வாலிபர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆறு பேரும் அதிரடியாக ஜெயராமனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச் சென்று ஏற்கனவே கடையின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.
கடையில் பொருள் வாங்க வந்தவர்கள், இதைக் கண்டு ஏதும் புரியாமல் திகைத்தனர். இதுகுறித்து ஜெயராமனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் அடிப்படையில் விரைந்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் ஜெயராமனை இழுத்துச் செல்வது உறுதியானது. இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
போட்டி காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட இந்தியர்களே வட இந்திய வாலிபரை சேலத்தில் அதுவும் ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் காட்சியைப் போல் சிசிடிவி காட்சிகள் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


