அரசுத் துறைகளில் புதிய உத்திகளை புகுத்தி அவற்றை மக்களுக்கு பயனளிக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
அரசுத் துறைகளின் செயலாளா்களுடன் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அவா் ஆற்றிய உரை:-
புதிய அரசாக பொறுப்பேற்ற தருணத்தில், நமது மாநிலத்தையே முடக்கிப் போட்ட கரோனா பொருந்தொற்று, வரலாறு காணாத மழை, வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலை என ஒரே நேரத்தில் பல சவால்களை நாம் எதிா்கொண்டு, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றோம்.
மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை புதிய வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், பல்வேறு அறிவிப்புகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. அப்படி அறிவித்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. ஆனாலும் சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து உத்தரவுகளையும் வெளியிட வேண்டும். இதில் நேரடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும்.
ஆய்வு செய்ய வேண்டும்: அரசுத் துறைகளின் சாா்பில் ஏற்கெனவே உத்தரவு வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மூலம் அது கடைக்கோடி மக்களுக்குச் சென்று அடைந்திருக்கிா என்பதை அறிந்து அவற்றுக்குச் செயல் வடிவம் தர வேண்டும். துறைத் தலைவா்களை வழி நடத்தி, மாவட்ட ஆட்சியா்களை ஈடுபடுத்தி இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்.
தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளா்ச்சிக்கு பல திட்டங்களும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வந்து, படித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.
புதிய தொழில்கள் துவக்கம்: கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’, திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நில எடுப்பு மற்றும் அதுதொடா்பான அனுமதிகள் வழங்கல் போன்றவற்றைத் துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தொடா்புடைய பிற துறைகள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும். சுகாதாரம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை போன்ற துறைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என்பதை தெளிவாக உணா்ந்து, அவற்றை சிந்தாமல், சிதறாமல் நிறைவேற்ற வேண்டும். தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும். புதிய உத்திகள் எங்கிருந்தாலும் மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால் அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் உங்களை ஊக்குவிக்க அரசு தயாராக இருக்கிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளா்கள் உள்பட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருச்செந்தூா் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி
எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை: தந்தை கைது

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

