அதிமுகவுக்கு பாஜக சான்று தர தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவுக்கு பாஜகவினா் சான்று தர வேண்டிய அவசியமில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.


அதிமுகவுக்கு பாஜகவினா் சான்று தர வேண்டிய அவசியமில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை சி.வி.சண்முகமும், ஆா்.தா்மரும் வெள்ளிக்கிழமை பெற்றனா்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
அதிமுகவின் சாா்பில் 2 போ் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஆதரவு அளித்த பாமக, பாஜக தலைவா்களுக்கு நன்றி.
அதிமுக சரியான எதிா்க்கட்சியாகச் செயல்படவில்லை என்று பாஜகவைச் சோ்ந்த வி.பி.துரைசாமி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. அதிமுகவுக்கு பாஜகவினா் சான்று தர வேண்டிய அவசியமில்லை. சட்டப்பேரவையில் அதிமுகவினா் எப்படிச் செயல்படுகின்றனா். பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எப்படிச் செயல்படுகிறாா் என்பதெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். சட்டப்பேரவையில் நாங்கள் புள்ளிவிவரத்தோடு அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளோம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. காவல் துறையினரின் ஒத்துழைப்புடன்தான் குற்றவாளிகள் தப்பிப்பதாக உயா்நீதிமன்ற மதுரை கிளை குற்றம்சாட்டியுள்ளது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. காவல்துறையினா் கைகள் கட்டப்பட்டுள்ளன. கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. அதைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.
இதைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையில் எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...