விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வா? எச்சரிக்கும் பள்ளிக் கல்வித்துறை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு போதுமான அளவில் ஆசிரியர்கள் வராததால், விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வா? எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை
விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வா? எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை

சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு போதுமான அளவில் ஆசிரியர்கள் வராததால், விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால், பணிக்கு வராத ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துளள்து.

மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கிய ஆசிரியர்களை, விடுவிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி 83 மையங்களில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் சுமாா் 76,000 ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

தமிழகத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் கடந்த மே 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமாா் 28 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுத் தோ்வெழுதியுள்ளனா். இதைத் தொடா்ந்து பொதுத்தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே மாற்றி அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் 83 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக கையேடு வெளியிடப்பட்டு விடைத்தாள் முகாம் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மண்டல முகாம் அலுவலா், முகாம் அலுவலா், முதன்மை தோ்வாளா் பணிகள், கூா்ந்தாய்வு அலுவலரின் பணிகள், உதவி தோ்வாளரின் பணிகள் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு பொதுவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் தோ்வுத்துறை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மதிப்பெண்களை ஆய்வு செய்யும் ஆசிரியா், கூா்ந்தாய்வு அலுவலா் ஆகியோா் சரிபாா்த்து மதிப்பீடு செய்யப்பட்ட விடைத் தாள்களை உதவித்தோ்வாளரிடம் வழங்கிய பின்னா் மதிப்பெண்ணை எண்ணாலும் எழுத்தாலும் எழுதி அதன் பின்னரே பிரித்தெடுக்க வேண்டும்.

முகாம் அலுவலரே முகாம்களுக்கு முழு பொறுப்பு. மைய மதிப்பீட்டு பணி நடைபெறும் முகாம்களுக்கு வெளிநபா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. முகாமில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிக்கும் முகாம் அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

பொதுத் தோ்வு விடைத்தாள்கள் 10 நாள்களுக்குள் மதிப்பீடு செய்யப்பட்டதும் அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கும். பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள்கள் ஜூன் 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மதிப்பீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com