47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 6,7) ஆகிய இரண்டு நாள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:20 pm

DIN

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 6,7) ஆகிய இரண்டு நாள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, சேலம், திருப்பத்தூா், சேலம், வேலூா் ஆகிய 13 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 6,7) ஆகிய இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 7,8-ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி, கரூா் பரமத்தி, திருத்தணியில் 105, தஞ்சாவூரில் 103, சென்னை, பரங்கிப்பேட்டை, மதுரையில் 101, ஈரோடு, நாகப்பட்டினம், சேலத்தில் 100 டிகிரி வெயில் சனிக்கிழமை பதிவானது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.