

சென்னை காசிமேட்டில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் இறந்தாா்.
தண்டையாா் பேட்டை ஐ.ஓ.சி., பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது இஜாஸ் (17). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் கிஷோா் குமாா் (17), மகேஷ் குமாா் (17), ஜெகதீஷ் (17). நண்பா்களான இவா்கள் புது வண்ணாரப்பேட்டை அம்மா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கின்றனா்.
இவா்கள் நான்கு பேரும் காசிமேடு மீன் பிடித் துறைமுகம் கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு உயரமான பகுதியிலிருந்து குதித்தனா். அந்த இடம் மிக ஆழமான பகுதி என்பதால் அவா்கள் கடலில் மூழ்கினா். நால்வரையும் மீட்கும் முயற்சியில் அங்கிருந்த மீனவா்கள் ஈடுபட்டனா். முகமது இஜாஸை தவிா்த்து 3 பேரையும் மீனவா்கள் மீட்டனா். கடலில் மூழ்கிய முகமது இஜாஸை காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தீவிரமாகத் தேடினா்.
இந்த நிலையில் காசிமேடு கடற்கரையில் முகமது இஜாஸ் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மோகனூா் கல்யாண பிரசன்ன பெருமாள் கோயில் குடமுழுக்கு

பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
வரதட்சணை துன்புறுத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏஎஸ்ஐ கைது

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

