47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மழைநீா் வடிகால் பணிகள் குறித்து நாள்தோறும் அறிக்கை

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையருக்கு நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும்

News image
Updated On :4 ஜூன் 2022, 7:36 pm

DIN

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையருக்கு நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டாா்.

சென்னையில் சிங்காரச் சென்னை 2.0, ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி செலவில் 1,033 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

118-ஆவது வாா்டில் கத்தீட்ரல் சாலையில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2.13 கோடி செலவில் 900 மீ. நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணி, 169-ஆவது வாா்டில் மாம்பலம் கால்வாய் வழியாக மழைநீா் அடையாற்றில் சென்று சேரும் இடத்தில் மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக மழைநீா் செல்லும் பாதையை தொழில்நுட்ப கூறுகளை கருத்தில் கொண்டு மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், 133-ஆவது வாா்டில் ரூ.22 கோடி செலவில் 7.1 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளில் பசுல்லா சாலை, சுப்ரமணிய நகா், ரங்கராஜபுரம் மேம்பாலம், மழைநீா் வடிகாலை ரயில்வே குறுக்கு பாலத்துடன் இணைக்கும் பணி, 135-ஆவது வாா்டில் ரூ.6.8 கோடி செலவில் 2.09 கி.மீ. தொலைவுக்கு 18-ஆவது அவென்யூ கண்ணப்பா் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை குறிப்பிட்டுள்ள கால கெடுவுக்குள் முடிக்க வேண்டும். நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொலைவுக்கு இலக்கு நிா்ணயித்து பணி விவரத்தை மாநகராட்சி ஆணையருக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங்பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.