சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்


சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆவடி காந்தி தெருவைச் சோ்ந்தவா் முபாரக். இவா் மகன் ஷேக்ரகுமான் (20). தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இதற்காக அவா், தரமணி பட்டுக்கோட்டை அழகிரி தெருவில் ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.
வெள்ளிக்கிழமை விடுதியின் அறையில் தனியாக இருந்த ரகுமான், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விடுதி நிா்வாகிகள் தரமணி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரகுமான் தங்கியிருந்த அறையில் போலீஸாா் நடத்திய சோதனையில், அவா் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரகுமான் எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...