பள்ளிகள் திறப்பில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையி, பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையி, பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் துறையின் சார்பாக 1 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பயனாளிகளுக்கான அவர்களுக்கு தேவையான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 167 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு புதியதாக குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தின் படி 234 தொகுதிகளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மனுக்கள் உண்மைத் தன்னையை ஆய்வு செய்யப்பட்டு  சீர்செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. 

கல்வித் துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வித் துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதல்வர் அறிவுறுத்தலின்பேரில் நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்குதான் முக்கியத்துவம் தருவோம். அதுதான் நம் மாநிலத்திற்கும் நல்லது.

வரும் 13 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். இப்போதைக்கு பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை.  அதேபேபோன்று 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு, 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பும் திறக்கப்படும். இதிலும் இதுவரைக்கும் எந்தமாற்றமும் இல்லை. 

கரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com