மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. 
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலை அலங்கரிக்கும் பிரம்மாண்ட பொம்மை யானை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி சுமார் 44 ஆண்டுகளாக கோவில்களில் ஆன்மிக சேவை செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தபின் கோயில் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு பின் நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. 

விசேஷ நிகழ்வுகளில் வைக்கப்படும் வழக்கமான யானை பொம்மையாக இருந்தாலும் அது பெருமாள் கோயிலுக்குள் இருப்பதால், இறந்த மதுரவல்லி யானை போன்றே இருப்பதாக, பெரியவர்களும், குழந்தைகளும் அதன் அருகே நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com