சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியப் போக்கால் குழந்தை பிரசவித்த இளம்பெண் மரணமடைந்ததாகக் கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் ஜேசிபி மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி(34), கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த நாளே கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு கலைவாணி உயிரிழந்தார். கலைவாணி உயிரிழந்த தகவல் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பயன்படுத்திய மயக்க மருந்து அதிகளவில் கொடுத்ததால்தான் கலைவாணி உயிரிழந்ததாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின்போது விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பிரசவித்த பெண்ணை மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு பரிசோதனைக்கும் செவிலியர்களின் உதவியில்லாமல் நடந்தே அழைத்துச் சென்றதால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
உயிரிழந்த கலைவாணிக்கு மனநல பாதிப்பு மற்றும் தைராய்டு பிரச்னை இருந்ததாகவும் அதன் அடிப்படையில் பெண் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் அலட்சியப் போக்கால் பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


