விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்குபொதுவான முகப்புத் தோற்றம்: வரைபடங்களை முதல்வா் வெளியிட்டாா்

அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களின் பொதுவான முகப்புத் தோற்ற வரைபடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:40 pm

DIN

அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களின் பொதுவான முகப்புத் தோற்ற வரைபடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான கட்டடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பொதுப்பணித் துறை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக, அரசு பள்ளிக் கட்டடம், மாணவ மாணவியா் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சாா்பதிவாளா் அலுவலகம், நகா் ஊரமைப்பு இயக்குநரக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் பொதுப்பணித் துறை கட்டித் தருகிறது.

இந்த நிலையில், அந்தக் கட்டடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்து ஆலோசித்து இப்போது அவற்றின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதன் நவீன முகப்பு தோற்றம் மாற்றப்பட்டு பொதுவான கட்டமைப்பு பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு பள்ளிக் கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசுக் கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த நிகழ்வின் போது, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமைப் பொறியாளா் (கட்டடம்) இரா.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.