எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வர் திறந்து வைத்த சமத்துவபுர வீடுகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைக்கப்பட்டுள்ள 235வது பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

News image
சமத்துவபுர வீடுகளின் சிறப்பம்சங்கள்
Updated On :8 ஜூன் 2022, 6:14 am

DIN


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைக்கப்பட்டுள்ள 235வது பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சிங்கம்புணரி அருகேவுள்ள கோட்டை வேங்கைபட்டியில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 100 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த சமத்துவபுரத்தின் வீடுகளின் பணிகள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும்.

உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில்  கலைஞா் சிறுவர் பூங்கா ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது

தெருக்களில் ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.96.39 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும், மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.54.29  லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் ரூ.4.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நியாய விலைக்கடை கட்டப்பட்டுள்ளது. ரூ.8.09 லட்சம் மதிப்பீட்டில்  அங்கன்வாடி மையக் கட்டடம், நூலகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. 

இந்த சமத்துவபுரம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 12.253 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 100 வீடுகள், தலா ரூ.1.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

Story image

தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பிற்காக ரூ.15.87 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூ.2.92 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமத்துவபுரத்தின் முகப்பில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.