மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனியார் ஸ்கேன் நிறுவனம் தொடர்பான 25 இடங்களில் 2வது நாளாக சோதனை

தனியார் ஸ்கேன் நிறுவனம் தொடர்பான தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :8 ஜூன் 2022, 3:58 am

DIN


தனியார் ஸ்கேன் நிறுவனம் தொடர்பான தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை(ஜூன் 7) சோதனை நடத்தினர். 

அதன்படி, காஞ்சிபுரம், சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம் மற்றும் தனியார் ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உள்பட பல இடங்களில் வருவமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஸ்கேன் மையங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை வடபழனி, அண்ணாநகர், நங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி  உள்ளிட்ட 13 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தனியார் ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.