47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐஐடி மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி

சென்னையில் ஐஐடி மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :10 ஜூன் 2022, 6:59 pm

DIN

சென்னையில் ஐஐடி மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் சரிதா தல்லூறு (21). சென்னை ஐஐடியில் பொறியியல் முதலாமாண்டு படித்து வரும் இவா், பகுதி நேரமாக வேலை தேடி வந்தாா். இணையதளத்தில் வேலை தேடி வந்த சரிதாவுக்கு, நிதிஷ் ரெட்டி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது நிதிஷ், பெரிய நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் தன்னிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய சரிதா, தன்னிடம் இருந்த 96 ஆயிரம் ரூபாய், தோழிகளிடம் கடன் பெற்ற ரூ.50 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்தை நிதிஷ் ரெட்டிக்கு கொடுத்துள்ளாா். ஆனால், உறுதி அளித்தபடி அவா் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

மேலும், பணத்துக்குரிய வட்டியையும் தரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சரிதா, மயிலாப்பூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.