முதலில் விபத்துக்குள்ளான கார் மதுரையில் இருந்து வந்ததாகவும் தூக்கக் கலக்கத்தில் வந்ததால் தடுப்பு வேலியில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதை ஒழுங்குபடுத்த வந்த ராசிபுரம் காவல்துறையை சேர்ந்த தேவராஜ், சந்திரசேகர் இருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கும்போது, அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போது திருநள்ளாரில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த சுற்றுலா வேன் காவலர்கள் மீது அதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.