தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தில்லி செல்கிறார்!

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை தில்லி செல்கிறார்.

News image

தமிழக ஆளுநர் ரவி

Updated On :13 ஜூன் 2022, 3:26 am

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை தில்லி செல்கிறார்.

நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை  இரவு 9 மணிக்கு விமானத்தில் தில்லி செல்கிறார்.  நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் சூழலில், ஆளுநர் ரவி தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.