தேமுதிக தலைவா் விஜயகாந்த் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை சென்றாா்.
ஓரிரு நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அவரை மருத்துவா்கள் அறிவுறுத்தியதால், விஜயகாந்த் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


