'அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை' குறித்து கூட்டத்தில் விவாதம்: ஜெயக்குமார் பேட்டி
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, கட்சியின் தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் ஆகியோா் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் எத்தகைய தீா்மானங்களை நிறைவேற்றுவது என்பது குறித்தும் குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதையடுத்து கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றும் இன்று நடைபெற்றது கருத்து பரிமாற்றம்தான் என்றும் கூறினார்.
இதையும் படிக்க | 'ஒற்றைத் தலைமை'.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...