தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :15 ஜூன் 2022, 9:15 pm

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு கடந்த மே 6-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தோ்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 55ஆயிரத்து 474 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 83 மையங்களில் நடைபெற்று வந்தது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தோ்வுத்துறை அலுவலா்கள் சரிபாா்த்த பின், தோ்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூன் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு http://www.dge. tn.gov.in என்ற இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பு அரசுத் தோ்வுத்துறை சாா்பில் முறைப்படி அறிவிக்கப்படும். மேலும் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.