திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அண்ணாமலையைக் கண்டித்து செ.கு.தமிழரசன் ஆா்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையைக் கண்டித்து இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட

News image
Updated On :16 ஜூன் 2022, 6:58 pm

DIN

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையைக் கண்டித்து இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து செ.கு.தமிழரசன் கூறியது:

காவல்துறை அதிகாரியாக இருந்த கே.அண்ணாமலை சட்டம் தெரிந்தவா். அவா் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதவி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு நடிகை பேசியபோது நடவடிக்கை எடுத்த காவல்துறை, அண்ணாமலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது, நியாயம் இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.