அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக என்று அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜூன் 2022, 9:53 am

DIN

மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக என்று அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அவர் கூறியதாவது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி வருகிறது. ஆட்சியில் இல்லாவிட்டலும் அரசைவிட அதிக பணிகளை செய்யக் கூடியது அதிமுக.

மடிக்கணினி, திருமண உதவித்தொகை, மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை திமுக முடக்கியுள்ளது. 2017-ல் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 9 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடிந்தது. அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமது தலைமையிலான அதிமுக ஆட்சியில், மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தேன். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் திமுக அரசு நிபந்தனைகள் விதித்து நகைக்கடன் தள்ளுபடி செய்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.