முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காய்ச்சல்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், அவர் பங்கேற்கவிருந்த அரசு விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், அவர் பங்கேற்கவிருந்த அரசு விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி வெளியான செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் நாளை (20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிக்க | ராகுல் காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே, அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இவற்றுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்."
முன்னதாக, ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, தந்தையர் தினத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...