நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் 8வது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

News image

ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

Updated On :21 ஜூன் 2022, 4:57 am

DIN


அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பூசல் வலுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் 8வது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு  அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்துள்ளார்.

சென்னையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி. தர்மர்  உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தது முதலே, கட்சியின் மூத்த தலைவா்களான செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோா் இருவரிடமும் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மற்றொருபுறம் முன்னாள் அமைச்சா்கள் சிவபதி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா் எடப்பாடி பழனிசாமியுடனும், முன்னாள் அமைச்சா்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் பன்னீா்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஏழு நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது.

எடப்பாடி கே. பழனிசாமியை அப்பொறுப்புக்கு முன்னிறுத்தி அதிகாரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. செய்தியாளா்களைத் தொடா்ந்து சந்தித்து வரும் பன்னீா்செல்வம், இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறாா்.

இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சில நாளிதழ்களில் ஓ.பன்னீா்செல்வத்தை முன்னிறுத்தி இரு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதிமுகவின் தொடா் தோல்விகளுக்கும், சரிவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியும், சில தலைவா்களும்தான் என மறைமுகமாக அதில் விமா்சிக்கப்பட்டிருந்தது.

இது அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் தொடர்ந்து தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.