பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 
பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடிதம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். 

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினரும் உயர்நீதிமன்ற உத்தரவுப் படி பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும், பாதுகாப்பு வழங்கக்கூடாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மனுவாக கோரிக்கை வைக்கப்பட்டது. 

எனினும், உள் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால், அதற்கு தடை விதிக்க முடியாது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. இதனிடையே ஓபிஎஸுக்கு ஆதரவு அளித்து வந்த சில மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் அணிக்குத் தாவி வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளக் வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com