வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கைக்கு 2-ம் கட்ட நிவாரணம் அனுப்பிவைப்பு

தமிழ்நாடு மக்கள் சார்பில் இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

News image
நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்
Updated On :22 ஜூன் 2022, 1:18 pm

DIN

தமிழ்நாடு மக்கள் சார்பில் இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மே 18ஆம் தேதி முதல்கட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 30 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக ரூ. 67.70 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இன்று மாலை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, 67.70 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று 2-ஆம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது. அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.