மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கலைக் கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர இணையம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2022, 3:12 am

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர இணையம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in அல்லது www.tngasa.org இணையத்தள முகவரிகள் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 50-ஐ இணைய வழி வங்கிச் சேவை, வங்கி அட்டைகள் மூலம் செலுத்த்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை கடந்த 20ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. இதில்  93.76 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பிஏ, பி.காம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர வரும் 22-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை  இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று உயா்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அவரவா் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயா்கல்வித்துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம் என்றும் 044-28260098 , 044-28271911 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என்றும் உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.