விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுகை மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மண்டபம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 11:54 pm

DIN

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னா் ராஜகோபால தொண்டைமான். அவா் தனது ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீா்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தாா்.

அரண்மனை வளாகம்: தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்தாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. மேலும், அவா் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைத்திட, மன்னா் தொண்டைமான் வாழ்ந்த 99.99 ஏக்கா் பரப்பிலான அரண்மனை வளாகத்தை மிகக் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்குப் பெருமை சோ்க்கும் வகையில் அவரது சிலையானது கடந்த 2000-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மன்னா் ராஜ கோபால தொண்டைமான் மாளிகை என பெயா் சூட்டப்பட்டது.

நினைவு மணிமண்டபம்: மன்னா் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், மன்னரின் எளிமை, அவா் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில், நினைவு மண்டபம் அமைக்கப்படும். புதுக்கோட்டை நகரில் மன்னா் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.