மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

"ஆர்ஆர்பி; கோரக்பூர் தேர்வர்கள் நியமனம் முறியடிப்பு: சென்னை தேர்வர்களுக்கு பணி நியமனம்"

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன்  அனைத்து சென்னை தேர்வர்களுக்கு பணிநியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

News image
சு.வெங்கடேசன் எம்.பி
Updated On :5 ஜூலை 2022, 11:58 am

DIN

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன்  அனைத்து சென்னை தேர்வர்களுக்கு பணிநியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர்  சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர்களை சேர்க்கும் நிகழ்வுகளுக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கண்டித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். ஆனால்,  இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன், அந்த பணியிடங்கள் அனைத்து சென்னை தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ஆர்ஆர்பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு, கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு எனது தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளிக்கப்பட்டது. இப்போது மீதி இருந்த 39 பேருக்கும் வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து சென்னை ஆர் ஆர் பி தேர்வர்களும் வேலை பெறுகிறார்கள்.

இதன் மூலம் இனி சம்பந்தப்பட்ட ரயில்வேயைச் சேர்ந்தவர்களை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் பழக்கம் எதிர்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். 

இத்துடன் மெரிட்டில் தேர்வாகி மருத்துவ தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. 

காத்திருப்போர் பட்டியல் தேர்வர்களின் பட்டியல் 2 ஆண்டுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தாராள மனப்பான்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேலையில் சேர இருக்கிற காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.