ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் செல்வநவீன்
ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் செல்வநவீன்

பள்ளிக்குச் சென்ற முதல்நாளில் எல்கேஜி மாணவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலியானார். இதில் 7 சிறுவர், சிறுமியர் படுகாயமடைந்தனர்.
Published on

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி சிறுவன் பலியானார். இதில் 7 சிறுவர், சிறுமியர் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் பள்ளிக்கு நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் ஆட்டோ மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செய்துங்கநல்லூர் அருகே உள்ள அனவரதநல்லூர் பகுதியில் இருந்து ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக  ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .  

இதில், நெல்லை மாவட்டம்  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெட்டியபந்தி ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது  மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  பலியானார். 

மேலும், இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். 

உடனே, இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இங்கு ராகவி உள்ளிட்ட 4 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

இதில், இறந்த செல்வநவீன் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்து திங்கள்கிழமை தான் பள்ளிக்கு முதன் முதலாக செல்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்குச் சென்ற முதல்நாளில் எல்கேஜி சிறுவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com