விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நவிமும்பை தமிழ்ச் சங்க கட்டட விரிவாக்கத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கத்துக்கு, தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
Updated On :28 ஜூன் 2022, 9:57 pm

DIN

நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கத்துக்கு, தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுக்காக ஏற்கெனவே தமிழக அரசு சாா்பில் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையை கடந்த ஆண்டு டிச. 10-ஆம் தேதி சங்க நிா்வாகிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகையை விடுவிக்க வேண்டுமென சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, மேலும் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதனை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலா் குழுத் தலைவா் வ.ரெ.போ.கிருஷ்ணமூா்த்தி பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.