தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜெயலலிதா மரணம்: மார்ச் 7 முதல் மீண்டும் விசாரணை

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையைத் தொடங்கவுள்ளது. 

News image

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

Updated On :2 மார்ச் 2022, 6:32 am

DIN

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையைத் தொடங்கவுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற  முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, விசாரணைக்குத் தடை கோரி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்ததால் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெறவில்லை. 

இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் இயக்குநா் நிகல் டாண்டன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை வருகிற மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது. மார்ச் 7, 8 தேதிகளில் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.