10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணையை இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணையை இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 

கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு 10, 11. 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது. 

மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 

மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 

மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதி, 11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆமே தேதி, 12 ஆம் வகுப்பு ஜூலை 23 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பள்ளிகள் திறப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 

தேர்வு தேதிகள்: எந்தெந்த தேதிகளில் என்னென்ன தேர்வுகள் நடக்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக போராடி வரும் ஆசிரியர் குழுவை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு எடுக்கப்படும். எதையும் எடுத்தோம்  முடித்தோம் என்றில்லாம் இருப்பதற்காக, சற்று தாமதமாகி வருகிறது என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com