அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்பூர் மேயராக தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு

திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த என்.தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

News image
திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு
Updated On :4 மார்ச் 2022, 5:34 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த என்.தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதில், திருப்பூர் மாநகராட்சி 49 ஆவது வார்டில்  வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த தினேஷ்குமாரை அக்கட்சி தலைமை, மேயர் வேட்பாளராக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

இதில் மேயர் பதவிக்குப் போட்டியிட மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் தினேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டார்.

மேயராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ்குமார் திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மேயராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ் குமாருக்கு திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அதேபோல துணை மேயர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.