புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க இடைக்கால தடை

வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என வனத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2022, 7:28 pm

DIN

வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என வனத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், மேகமலை வனவிலங்கு மற்றும் சரணாலயத்தில் வனவிலங்கு காப்பாளா், தேனி வனச்சரக மாவட்ட வன அலுவலா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு வன சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், வன பாதுகாப்பு சட்டத்தின் விதிகளையும் மீறுவதாகும். எனவே மேய்ச்சலுக்கு கால்நடைகளை வனப்பகுதிக்குள் அழைத்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்வதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வனத்துறைக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.