திருச்சி மாவட்டத்தில் மேயர், துணை மேயர் உள்பட 40 பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல்       

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 
திருச்சி மாவட்டத்தில் மேயர், துணை மேயர் உள்பட 40 பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல்       

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ். கண்ணனூர், சிறுகமணி, தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளில் மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என மொத்தம் 40 பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com