அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சங்ககிரி பேரூராட்சி வரலாற்றில் முதன்முறை: தலைவராக பெண் ஒருவர் போட்டியின்றித் தேர்வு 

சங்ககிரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்  4வது வார்டு  பெண் உறுப்பினர் மணிமொழி முருகன் போட்டியின்றித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image
சங்ககிரி பேரூராட்சி தலைவராக பதவியேற்கும் 4வது வார்டு உறுப்பினர் மணிமொழிமுருகன். 
Updated On :4 மார்ச் 2022, 7:48 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்  4வது வார்டு  பெண் உறுப்பினர் மணிமொழி முருகன் போட்டியின்றித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகள் எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்ட பின்னர் வார்டு எண்கள் 6, 12 ஆதிதிராவிடர் பெண்களுக்கும்,  1, 2, 4, 5, 14, 15, 16 உள்ளிட்ட வார்டுகள் பெண்களுக்கும் என மொத்தம்  9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மற்ற 9 பொது வார்டுகளில் மூன்று பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 12 பெண்கள் தற்போது நடைபெற்று முடிந்த வார்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆண்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  பேரூராட்சி 18 வார்டுகளில்  திமுக 14 வார்டுகளிலும், மார்ச்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும், அதிமுக மூன்று வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இதனையடுத்து பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளரான 4வது வார்டு பெண் உறுப்பினர் மணிமொழிமுருகன் தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான வ.சுலைமான்சேட்டிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இத்தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேர் பங்கேற்கவில்லை.  புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு திமுக நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

பேரூராட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் தலைவராக தேர்வு 
சங்ககிரி பேரூராட்சியில் 1941ம் ஆண்டு முதன்முதலாக என்.எபிநேசரும், 1946ல் எஸ்.கே.சையத் மதார் சாஹிப்பும், 1953ல்  இ.ஆல்பிரட்டும், 1958ல் கே.சிவசுப்ரமணியமும், 1965ல்  எஸ்.பி.முத்துவும், 1970ல் பி.பழனிசாமிகவுண்டர், 1986ல் எஸ்.எம்.கிருஷ்ணன், 1989ல் எ.எம்.முத்துசாமியும், 1996ல் எஸ்.குமாரும், 2001 ஆர்.செல்லப்பனும், 2006ல் டி.என்.அத்தியண்ணனும்,  2011ல் ஆர்.செல்லப்பனும் தலைவராக பதவி வகித்துள்ளனர். 

2016ம் ஆண்டிற்கு பின்னர் உள்ளாட்சி நகர்புறத்திற்கான தேர்தல் நடைபெறவில்லை.  தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர்  4வது வார்டு உறுப்பினர் மணிமொழிமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து சங்ககிரி பேரூராட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.