அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பழனிசெட்டிபட்டியில் அதிமுக ஆதரவுடன் அமமுக வெற்றி

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 9:01 am

DIN

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், திமுக 7 வார்டுகளிலும், அமமுக  வார்டு, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், திமுக சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 15-வது வார்டு உறுப்பினர் மு.பவானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் 11-வது வார்டு உறுப்பினர் அ.மிதுன்சக்கரவர்த்தி போட்டியிட்டார்.

தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், அமமுக வேட்பாளர் அ.மிதுன்சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் இருவரில், ஒருவர் திமுகவிற்கும், மற்றொருவர் அமமுகவிற்கும் ஆதரவளித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமமுக வேட்பாளர் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதாக அமமுக நிர்வாகிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.