வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வலிமை படத்துக்கு எதிராக வழக்கு: தயாரிப்பாளர் போனி கபூருக்கு நோட்டீஸ்

வலிமை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :11 மார்ச் 2022, 12:41 pm

DIN

வலிமை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தை திரையில் பார்த்த ரசிகர்கள், படத்தைக் கொண்டாடினர். மேலும் படமும் நல்ல வசூலைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வலிமை படத்துக்கு எதிராக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார். 

இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.