புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஏா் இந்தியா நிறுவனத்தை விற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

 ஊழியா்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல், ஏா் இந்தியா நிறுவனத்தை விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :11 மார்ச் 2022, 8:56 pm

DIN

 ஊழியா்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல், ஏா் இந்தியா நிறுவனத்தை விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏா் இந்தியா நிறுவனம், டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் ஏா் இந்தியா ஊழியா்கள் தொழிற்சங்கமான ஏா் காா்ப்பரேஷன் ஊழியா்கள் சங்கம் சாா்பில் கடந்தாண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதில், தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல், ஏா் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது வரை ஊழியா்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏா் இந்தியா குடியிருப்புகளிலிருந்து ஊழியா்களை வெளியேற்றக் கூடாது. மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

தற்போதைய ஊழியா்களை டாடா நிறுவனம் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஊழியா்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் ஏா் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாா்த்திபன், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், பங்கு விற்பனை போன்ற பொருளாதாரம் சாா்ந்த அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு விற்கும் முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.