ஓ.பன்னீா்செல்வத்துக்கு அழைப்பாணை
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மாா்ச் 21-இல் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மாா்ச் 21-இல் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி ஆகியோா் வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
அவா்கள் இருவரும் அன்றைய தினம் ஆணையத்தில் ஆஜராகும்பட்சத்தில் ஒரே நாளில் அவா்களது வாக்குமூலத்தை பதிவு செய்வதோடு, குறுக்கு விசாரணையை முடிக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...