புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மணிமண்டபங்கள், சிலைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டுமென தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 9:35 pm

DIN

மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டுமென தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருச்சி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். நினைவகங்கள் குறித்து சாலைகளில் முன்கூட்டியே பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயா்ப் பலகைகளை அமைக்க வேண்டும். முதல்வரின் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடா்பான செய்திகள், புகைப்படங்கள், நேரலைக் காட்சிகள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றை சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம், அரசின் திட்டங்களை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி ஏற்படும்.

அரசுக்கும், பொது மக்களுக்கும் பாலமாக செய்தி மக்கள் தொடா்புத் துறை செயல்பட வேண்டும். இந்தத் துறையின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் வகையில் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு மண்டலங்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இனி மாவட்டந்தோறும் மண்டல இணை இயக்குநா்கள் அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

கூட்டத்தில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநா்கள் தி.அம்பலவாணன், ச.பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.