மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2022, 1:13 pm

DIN

புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை ஜனவரி 10- ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10- ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகள் வரை ஜனவரி 18- ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன. இருப்பினும், இணைதளம் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனிடையே, கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள் (பிப். 4) முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கவில்லை. 

இந்த நிலையில் புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள்(எல்.கே.ஜி., யு.கே.ஜி.) திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.